உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட மீலகேவ பகுதியின் 34 பேர்

(UTV|கொழும்பு) – குருநாகல் – மீகலேவ பகுதிகளை சேர்ந்த 34 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

16 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட சிப்பாயும் ஏனைய கடற்படை சிப்பாய்கள் சிலரும் தொடர்பை பேணியதாக கூறப்படும் நிலையில் இவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கோட்டாவின் வெளிநாட்டு சுற்றுப்பயண செலவுகள் பற்றிய விளக்கம்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்வு [UPDATE]

ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை