உள்நாடு

உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – 2020ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைக்கான உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை(27) ஆரம்பிக்கப்படவுள்ளன.

கொரோனா தொற்று பரவியதால் நீதிமன்றக் கட்டடத் தொகுதி அமைந்துள்ள பிரதேசம் அபாயமுள்ள பகுதியாக மாறியுள்ளதென உயர் நீதிமன்ற பதிவாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான முக்கிய விடயங்கள் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவசர நிலைமைக்கு அமைய வழக்கொன்றை விசாரிக்க முடியும் என கருதினால், நீதிமன்றத்தின் அபிப்பிராயத்திற்கு அமைய தகுந்த உத்தரவொன்றை பிறப்பிக்க முடியும் என உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியுமாயின் புதிய ஆவணக் கோவைகளை ஏற்கும் நடவடிக்கை முற்பகல் 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஏதேனும், அவசர விடயம் தொடர்பில் கோவையொன்றை முன்வைக்க தேவையேற்பட்டால் முன்கூட்டியே பதிவாளரை தொடர்பு கொண்டு திகதி மற்றும் நேரத்தை ஒதிக்கிக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“அரச நிறுவனங்கள் தொடர்பில் நாடாளுமன்றிற்கு வரவுள்ள தீர்மானம்! 

பஸ் கட்டணங்கள் குறையலாம்!

மேல் மாகாணத்தில் 993 பேர் கைது