(UTV -| கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் வேட்பாளர்களுடன் இணைந்து செயற்பட அரச நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று(23) வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, தேர்தல் காலப்பகுதிக்குள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும், அமைச்சுகள், திணைக்களங்கள், நியதிச் சட்ட சபைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ஆகியவற்றின் அதிகாரிகள் தேர்தல் வேட்பாளர்களுடன் இணைந்து செயற்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான நடவடிக்கைகள் கட்சிகள், குழுக்கள் அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் என்பதால் தேர்தல் வேட்பாளர்களுடன் இணைந்து செயற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அரச நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.