வணிகம்

தோட்டத் தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக ஹேலிஸ் பிளான்டேஷன்ஸ் நடவடிக்கை

(UTV | கொழும்பு) – Covid-19 தொற்றுநோய்க்கு எதிராக போராடுவதற்காக சுகாதார அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்ட முறையான சட்டதிட்டங்கள் அடங்கிய பட்டியலுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஹேலிஸ் பிளான்டேஷன்ஸ் பிரிவின் பெருந்தோட்டத் துறை, தொழிற்சாலைகள் மற்றும் தோட்ட சுற்றுச் சூழலுக்குள் பின்பற்ற வேண்டிய பாரிய சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதுடன் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களினதும் அன்றாட தேவைகளை கவனித்துக் கொள்வதற்காக உறுதிப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, நிறுவனம் 140,000மான, தமது ஒட்டுமொத்த தோட்டத் தொழிலாளர் சமூகத்துக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும், தோட்ட தொழிலாளர் வீட்டு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக உலருணவுப் பொருட்களை பெற்றுக் கொடுத்ததுடன் அவை தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக நேரடியாக தோட்டத்துக்கே வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதேச மக்கள் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரதேச அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தோட்ட, மற்றும் பணியாளர்களின் விடுதிகளை சுத்தப்படுத்தல், மோட்டார் கிருமி அழிப்பு இயந்திரம் (Motorise spraying Machines) பயன்படுத்தி கிருமிகளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“எமது அனைத்து ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் சுகாதாரமும் மற்றும் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது. COVID -19க்கு எதிராக எமது தொழிலாளர்கள் மற்றும் தோட்ட சமூகத்தை பாதுகாப்பதுடன் தொழிற்துறையில் தீர்மானம் மிக்க இந்த அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

“விசேடமாக தேசிய மற்றும் உலகளாவிய பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத திருப்புமுனையாக உள்ள சந்தர்ப்பத்தில், பொருளாதார செயற்பாடுகளுக்கான பின்னடைவுகளை குறைப்பதற்காக நாம் எதிர்கொள்ளும் எல்லைகளுக்குள் எம்மால் முடிந்த அனைத்தையும் ஒருவருக்கொருவர் செய்யவேண்டி ஏற்படும்.

என்றபோதிலும் அதிகரித்துவரும் விதத்தை நாம் சரியாக ஆராய்ந்து மேற்பார்வை செய்வதுடன், எமது ஊழியர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் மட்டுமன்றி எப்போதும் தேவையான மூலப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இந்தச் சந்தர்ப்பத்தில் எமது கவனமானது 22,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் மட்டுமன்றி 140,000க்கும் அதிகமான எமது தோட்ட சமூத்தினரின் நல்வாழ்வு குறித்தே கவனம் செலுத்துகிறோம்” என ஹேலிஸ் பிளான்டேஷன்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

அனைத்து ஊழியர்களிடமும் தற்போது சுத்தப்படுத்தும் திரவம், முகக் கவசம் இருப்பதுடன் சில தோட்டங்கள் பாதுகாப்பு உபகரணங்களை சொந்தமாகவே தயாரிக்கும் அளவுக்கு ஆர்வமாக இருக்கின்றன. சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அன்றாடம் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சியையும் நடைமுறைப்படுத்தியுள்ளன.

மேலும் பாதுகாப்பு ஆலோசனைகள் அடங்கிய பதாதைகள் மற்றும் ஆலோசனை அறிவித்தல்களை அலுவலக காரியாலயங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று மொழிகளிலும் தோட்டத்தின் பிரதானமான இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோட்டத்தொழில் மனித அபிவிருத்தி ஊடாக மற்றும் Save the Children உடன் இணைந்து ஹேலிஸ் பிளான்டேஷன்ஸ் நடவடிக்கை மேற்கொள்வதுடன், சமூகத்திலுள்ள அனைத்து பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பகல் வேளை குழந்தை பராமரிப்பு இல்லம் மற்றும் குழந்தை மேம்பாட்டு மத்திய நிலையங்களை பாதுகாப்பதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு சமமாக, தோட்டங்களுக்கிடையில் தொடர்பை ஏற்படுத்துவதற்கான வசதிகள் மற்றும் ஒன்றிணைந்த நிர்வாக குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்களை மக்களுக்கு அறிவிப்பதற்காக அனைத்து நிர்வாகக் குழுவினரும் டெப்லட், அலைபேசி மற்றும் Dashboard ஆகிய கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1878ஆம் ஆண்டு வாஸ் பீ. ஹேலிஸினால் காலி நகரத்தை மையமாகக் கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஹேலிஸ் நிறுவனம் சிறப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுடன் 140 வருடத்துக்கு மேலான சேவையை வழங்கி வருவதோடு, ஹேலீஸ் குழுமம் நிலையான புத்தாக்கத்துடன் உலகை சிறப்பாக எதிர்கொண்டு உலகின் 5 வலயங்களில் 16 பிரிவுகளில் தடம்பதித்துள்ள பல்நோக்கு நிறுவனமாகும்.

நிகழ்காலத்தில் இலங்கை வியாபார துறையில் முன்னணி இடத்தை பெற்றுள்ள நிறுவனம் ஒரு பில்லியன் டொலர்களை வருமானமாக பெற்ற முதலாவது நிறுவனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் 3.3% பங்களிப்பை ஹேலீஸ் நிறுவனமே வழங்குகின்றது.

Related posts

எட்கா உடன்படிக்கை தொடர்பில் இன்று கலந்துரையாடல்

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

காலநிலை மாற்றத்திற்கு Jeff Bezos இடமிருந்து நிதியுதவி