வணிகம்

நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியிடமிருந்து 4,500 மருத்துவ ஆடைகள் நன்கொடை

(UTV | கொழும்பு) –இலங்கையில் கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கான மருத்துவ ஆடைகளை  நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பி.எல்.சி.இன் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ப்ரியந்த தல்வத்த ஏப்ரல் 11, 2020 அன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இடம் வழங்கி வைத்தார்.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆனந்த ஜயலால் மற்றும் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் கூட்டாண்மை சமூக பொறுப்பு அதிகாரி தேஜ சில்வா ஆகியோரின் பங்களிப்புடன் இந்த எளிய நிகழ்வு இடம்பெற்றது.

நேஷனல் டிரஸ்ட் வங்கியின் உயர் அதிகாரிகளான மனிதவளத்துக்கான துணை தலைவர் ரமணிகா உனம்பூவ, தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி சஞ்சய செனரத், துணைத் தலைவர் நிஸஜ ஆரியசிங்க ஆகியோர் மற்றும் சுகாதார அமைச்சக ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தேசிய முயற்சியை ஆதரிக்கும் நோக்கில், நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி கூட்டாண்மை சமூக பொறுப்பு குழு, வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் வைத்தியர் ஆனந்த ஜயலால் தலைமையிலான சுகாதார, சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு அதிகாரிகளை அணுகி, தற்சமயம் சுகாதார சேவைகள் மற்றும் சுகாதார பணியாளர்களின் மிக முக்கியமான தேவைகளைப் புரிந்துகொள்ள முயன்றது.

இந்தக் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, சகல இலங்கையர்களின் நலனுக்காக தமது ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தும் முன்னணி சுகாதார ஊழியர்களின் நன்மைக்காக் கொவிட்-19 சிறப்பு மருத்துவமனைகளாக நியமிக்கப்பட்ட அனைத்து சிகிச்சை மையங்களுக்கும் மருத்துவ ஆடைகளை விநியோகிக்க, அமைச்சின் முழு ஆதரவுடன் வங்கி முடிவு செய்தது.

இம்முயற்சியில் வங்கியை ஆதரித்த இலங்கை கடற்படை, கொள்வனவு செய்த துணிகளால் ஆடைகளை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. சுகாதார அமைச்சக அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படைக்கும் வங்கிக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு, வங்கியின் முன்முயற்சிக்கு ஊக்கத்தை அளித்தது. இதனால், வங்கி உறுதிமொழி அளித்த நன்கொடை தொகை முழுவதையும், சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் மேற்பார்வையில் பதிவுசெய்யப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து துணிகளை கொள்வனவு செய்து முன்னணி சுகாதார ஊழியர்களுக்காக 4,500 மருத்துவ ஆடைகளை தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முயற்சியைப் பற்றி பேசிய நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பி.எல்.சி இன் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ப்ரியந்த தல்வத்த,

“உலகமெங்கும் பரவியுள்ள கொவிட்-19 தொற்றுக்கு எதிராக நம் தேசத்தைப் பாதுகாக்க போராடும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, இலங்கையர்களின் நலனுக்காக தமது ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தும் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு ஆதரவளிப்பது நமது பொறுப்பு என்பதை புரிந்துகொண்டோம். இந்த அடிப்படையில்தான், இலங்கை கடற்படையுடன் இணைந்து சுகாதார ஊழியர்களுக்கு 4500 மருத்துவ ஆடைகளை வழங்குவதாக உறுதியளித்தோம். இந்த சவாலான சூழலில் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் தொடர்ந்து பணியாற்றியதற்காக இலங்கை முப்படையினருக்கும், இலங்கை காவல்துறையினருக்கும், முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கும் எங்கள் குழு சார்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் குழு மற்றும் எமது நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி வாடிக்கையாளர்கள் இந்த தேசிய பணியை ஆதரிக்க முழுமையாக உறுதி கொண்டுள்ளனர்” என்று கூறினார்.

4500 மருத்துவ ஆடைகளின் நன்கொடை, கொவிட்-19 க்கு எதிரான போராட்டத்திற்கு சிறந்த ஆதரவை வழங்க அமைச்சக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வங்கி திட்டமிட்டுள்ள பல முயற்சிகளில் முதலாவதாகும். தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) பற்றாக்குறை போன்ற எதிர்கால தேவைகளைப் புரிந்துகொள்ள வங்கி அதிகாரிகள் தொடர்ந்தும் சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றனர், மேலும், வளங்கள் கிடைக்கும் போது அவற்றை நன்கொடையாக வழங்கவும் தயாராக உள்ளனர்.

Business Today சஞ்சிகையின் மூலமாக இலங்கையில் காணப்படும் மிகச்சிறந்த 15 வியாபாரங்களில் ஒன்றாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் சௌகர்யம் எனும் அதன் நிலைப்பாடு என்பதற்கு தன்வசம் கொண்டுள்ள பெருமளவான நிதிசார் பொருள்கள், சேவைகள் காரணமாக அமைந்துள்ளன. இலங்கையின் முதலாவது முழுமையான டிஜிட்டல் வங்கியான FriMiஇன் பின்னால் செயற்படும் வங்கியாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அமைந்துள்ளது. நாடு முழுவதும் வங்கி 96 கிளைகளை கொண்டுள்ளது. அத்துடன் தனது ATM வலையமைப்பை 127 பகுதிகளில் கொண்டுள்ளதுடன், 48 பண வைப்பு மற்றும் மீளப் பெறல் இயந்திரங்களையும் கொண்டுள்ளது.

Lanka Pay வலையமைப்பில் 3700க்கும் அதிகமான ATMகளுடனும் இணைந்துள்ளது. இலங்கையில் American Express® அட்டைகளை விநியோகிக்கும் ஏக உரிமையை கொண்ட வங்கியாக திகழ்கிறது.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

இந்தியா, பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

டிசம்பரில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு