உள்நாடுசூடான செய்திகள் 1

அநுராதபுரம் டிப்போவை தற்காலிகமாக மூட தீர்மானம்

(UTV | கொவிட் –19) – இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான அநுராதபுரம் பஸ் டிப்போவை, தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (22) இனங்காணப்பட்ட கடற்படையில் பணியாற்றும் பெண்ணின், அயல்வீட்டு நபரொருவர் குறித்த டிப்போவில் பணியாற்றுவதன் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பஸ் டிப்போவில் 100க்கு மேற்பட்ட பஸ்கள், 300க்கு மேற்பட்ட உழியர்கள் சேவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தென் கொரிய சபாநாயகர் இலங்கைக்கு வருகை

நாடளாவிய ரீதியாக பல பகுதிகளில் மின்தடை

தேசிய பூங்காக்களுக்கு பூட்டு