(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான திகதி அறிவிக்கப் பட்டிருந்தாலும், சுகாதார அதிகாரிகளின் அறிவிப்பு வரும்வரை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எந்தவொரு பிரச்சார பொதுக் கூட்டங்களும் நடத்த மாட்டோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக இன்று(21) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான திகதி அறிவிக்கப் பட்டிருந்தாலும், சுகாதார அதிகாரிகளின் அறிவிப்பு வரும்வரை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எந்தவொரு பிரச்சார பொதுக் கூட்டங்களும் நடத்த மாட்டோம். #COVID19 தொற்று பரவலின் சங்கிலி தொடரை துண்டிக்க #வீட்டில்இரு -ந்து அனைவரும் ஒத்துழையுங்கள். https://t.co/RsuaHGTJyF
— Namal Rajapaksa (@RajapaksaNamal) April 22, 2020
மேலும், தேர்தல் ஆணைக்குழுவால், வாக்களிக்கும் முறைகளில் விஷேட தொழில்நுட்ப முறைகளை கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Given the challenges posed by the #COVID19outbreak, #SriLanka‘s Election Commission should consider this an opportunity to rethink the use of technology in the voting process. Expanding early voting options could also be useful for #GeneralElection2020.#COVID19LK #lka
— Namal Rajapaksa (@RajapaksaNamal) April 22, 2020
சுகாதார அதிகாரிகளின் அறிவிப்பு வரும்வரை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எந்தவொரு பிரசார பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட மாட்டாது என நாமல் ராஜபக்ஷ ஏலவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.