உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைவு கூறுகிறேன்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைவு கூறுகின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“கொடூரமான உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடந்து இன்றுடன் ஒரு வருடம்.

இன்றைய தினம் இந்தத் தாக்குதலில் உயிர்நீத்த, காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அனைவரையும் கவலையுடன் நான் நினைவு கூறுகின்றேன்.

இலங்கையர்களாகிய அனைவரும் காலை 8.45 மணிக்கு விளக்கேற்றி ஒரு நிமிடம் அவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துமாறு உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன்” என முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதலில் உயிர் நீத்தவர்களைநினைவு கூறும் நிகழ்வுகள் நாடு தழுவிய ரீதியில் இனம் மத பேதமின்றி அனைவராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

கோப் குழு கூட்டத்தில் ரஞ்சித் பண்டாரவின் மகன் எழும் சர்ச்சை