(UTV|கொழும்பு) – கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் மறக்க முடியாததும், மன்னிக்க முடியாததுமாகிய துரதிஷ்டவசமான கோரச்சம்பவம் நடந்து, இன்றுடன் ஒரு வருடமாகிறது. இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவன் என்ற வகையில், பயங்கரவாத செயல்களினால் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துயரங்களையும் நான் நன்கறிவேன். அதனால், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உறவுக்காகவும் நான் பிரார்த்திக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்
அத்துடன், அரசியல் இலாபத்துக்காக அப்பாவிகளை தண்டிப்பதை விடுத்து, இந்தப் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை அடையாளங்காண, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நான் அரசாங்கத்திடம் வேண்டி நிற்கின்றேன் என இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்