(UTV|கொழும்பு) – இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 602 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, 169 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அத்துடன் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலபப்குதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 34,733 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதியில் 8 ஆயிரத்து 883 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.