உள்நாடுசூடான செய்திகள் 1

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த தீர்மானம்

(UTV|கொழும்பு) -பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜீன் மாதம் 20ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

முன்னதாக பொதுத் தேர்தல் இந்த மாதம் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டத்தில்

சோற்றுப்பொதி மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலை 10% குறைப்பு

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த விமான படை மற்றும் கடற்படையினர்