விளையாட்டு

தென்னாபிரிக்காவுடனான கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு

(UTVNEWS | கொவிட் -19) – கொ​ரோனா தொற்று காரணமாக தென்னாபிரிக்காவுடனான  கிரிக்கெட் போட்டியை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் எதிவரும் ஜூன் மாதம் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் நடைபெற இருந்தது.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த போட்டி தொடர் ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த தீர்மானம் இருநாட்டு கிரிகெட் சபைகள் இனைந்து எடுத்துள்ளதாக அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஆசிய விளையாட்டு விழா – இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் இந்துனில் ஹேரத்

முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி 541 ஓட்டங்கள்

ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்த மிட்சல் ஸ்டார்கின் ஓவர்!