உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத்தேர்தலை மே 28 ஆம் திகதி நடத்தும் யோசனைக்கு ஹுல் நிராகரிப்பு

(UTVNEWS | COLOMBO) –பொதுத்தேர்தலை மே மாதம் (28) ஆம் திகதி நடத்தும் யோசனையை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் நிராகரித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றில் ஊடாகவே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மே மாதம் 28 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானியை வௌியிடுவதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது யோசனை முன்வைத்ததாக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் குறிப்பிட்டுள்ளார்.

அந்த யோசனையை நிராகரிக்கும் வகையில் இந்த கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 28 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதற்கு தாம் இணங்காதிருப்பதற்கான நிலைப்பாட்டினை நியாயப்படுத்துவதற்காக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஏழு விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

திங்களன்று பாடசாலைகளுக்கு விடுமுறை

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியது