(UTV | கொவிட் 19) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலினால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 இலட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, 600,703 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும், 2,340, 539 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 160,896 பேர் இதுவரை உலகளவில் உயிரிழந்துள்ளனர்.