உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நோக்கம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

(UTV|கொவிட் 19) – நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நோக்கம் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே ஆகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் இன்று(19) வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிப்பது மற்றும் சமூக பாதுகாப்பிற்காக பொறுப்புடன் செயற்படுவதும் கட்டயமாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை தொடர்ந்தும் உறுதிப்படுத்துவதற்காக கடந்த 4 வாரங்களாக அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை தளர்த்த வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சுகாதார அதிகாரிகள் வகுத்துள்ள அனைத்து சுகாதார வழிகாட்டல்களையும்  நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு

அமைச்சரவை பேச்சாளராக கெஹெலிய

ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பினார்