(UTV|கொழும்பு)- வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விமான நிலையத்தின் பணிப்பாளர் செஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அறிவுறுத்தலுக்கு அமைய, வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதன் முதற்கட்டமாக தெற்காசிய நாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், பாகிஸ்தானில் உள்ள 113 மாணவர்கள் நாளை மறுதினம் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதாகவும் இந்தியாவில் உள்ள 102 மாணவர்கள் இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அடுத்தவாரம் அளவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் விமான நிலைய பணிப்பாளர் செஹான் சுமனசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.