உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,475 பேர் கைது

(UTV|கொழும்பு)- நேற்றைய தினம்(18) காலை 06 மணி முதல் இன்றைய தினம்(19) காலை 06 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதிக்குள் நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 1,475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 368 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் இதுவரையிலான காலப்பகுதியில் 33,155 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 ஆயிரத்து 519 வாகங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“இறக்குமதி தடை முழுமையாக நீக்கம்” நிதி இராஜாங்க அமைச்சர்

எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு

“ஸ்ரீலங்கன் டொப் 100 விருது” பெற்றார் அஹ்மத் ஸாதிக்!