உள்நாடுசூடான செய்திகள் 1

ரயில் பயணச்சீட்டுகளை விநியோகிக்க விசேட செயற்றிட்டம்

(UTV|கொழும்பு)- நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் ரயில் பயணிகளுக்கு பயணச்சீட்டுகளை விநியோகிக்க விசேட செயற்றிட்டம் ஒன்று செயற்படுத்த உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயிவே பொது முகாமையாளர் டிலாந்த பெர்னான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது ரயில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு விதிமுறைகளையும் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாளை முதல் 400 ரயில்கள் சேவைகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

எனினும், சுகாதார நலன் கருதி பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பேருந்துகளில் பயணிக்க முடியுமான அளவில் இருந்து 50 வீதம் குறைக்கப்பட்ட பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் ரயில்களில் உள்ள ஒவ்வொரு வகுப்பிலும், 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரயில் நிலையத்திற்குள் உள்நுழையும் போதும், ரயிலில் பயணிக்கும் போதும், முகக் கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

குறித்த அறிவுறுத்தல்களை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இருமல், காய்ச்சல் மற்றும் தடிமல் உள்ளவர்கள், ரயில்களில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் ரயில்வே திணைக்களம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

இன்று முதல் அதிக வெப்பநிலை பதிவாகும்

யாழ். மல்லாகம் மோதல் சம்பவம் – இதுவரை 6 இளைஞர்கள் கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை : ஐவருக்கும் பிணை