உள்நாடு

சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு சுற்றறிக்கைகள் வௌியிடப்படவில்லை

(UTV|கொழும்பு)- வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு எந்த வகையிலும் சுற்றறிக்கைகள் வௌியிடப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சில கட்டுப்பாடுகளுடன் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என அறிக்கை ஒன்றினூடாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் வழமையாக முன்னெடுக்கப்படும் சத்திர சிகிச்சைகள் மற்றும் புற்றுநோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு அறிவிக்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிற்போடக்கூடிய சத்திர சிகிச்சைகள் தொடர்பில் தேவையான வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் அனுதாபப் பிரேரணை

சில பிரதேசங்களில் 24 மணிநேர நீர்வெட்டு

580 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பகுதிகள்