உள்நாடுசூடான செய்திகள் 1

ரூ.5,000 கொடுப்பனவு தொடர்பில் பிரதமர் அலுவலகம் விஷேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு 5,000 ரூபா கொடுப்பனவை பெறத் தகுதியுள்ள தரப்பினர் தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

சமுர்த்திக் கொடுப்பனவுகளை பெறத் தகுதியுள்ள குடும்பங்கள் வாழ்வாதாரத்தினை இழந்தமையின் கீழ் வழங்கப்படும் 5,000 ரூபாவை பெறுவதற்கு தகுதி பெற மாட்டாது என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள் தொழில்புரிகின்ற அல்லது ஓய்வுதியம் பெறுகின்ற நபர்களும் 5,000 ரூபாவை  பெற அனுமதியளிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது,

விவசாய, மீனவ ஒய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் நிரந்தர தனியார் தொழிலில்  ஈடுபடுபவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் 5,000 ரூபா வழங்கப்பட மாட்டாது .

முதியோர், நூறு வருடங்களை பூர்த்தி செய்த முதியோர், அங்கவீனர், சிறுநீரக நோய்க் கொடுப்பனவுகளுக்கு தகுதி பெறும் நபர் அல்லது அவர்களது குடும்பங்கள் தற்போதைய நிலைமை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக கிராமியக் குழு விதந்துரைக்குமாயின் 5,000 ரூபாவை பெற்றுக் கொள்ள முடியும் என பிரதமர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது,

Related posts

SLFP மத்திய குழு இன்று கூடுகிறது

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார

´கலுமல்லி´ 7 நாட்களுக்கு தடுப்பு காவலில்