(UTV|கொழும்பு)- மத்திய தபால் பறிமாற்ற நிலையத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய முறையான சுகாதார அனுமதிகளை பின்பற்றி சுங்கத்திணைக்களத்துடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இதுவரையில் மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு சுமார் 5 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளதுடன், அதனை பிரித்து அந்தந்த மாகாணங்களுக்கு விநியோகிப்பதற்கு இன்னும் மூன்று நாட்கள் வரை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.