உள்நாடு

மத்திய நிலையங்களில் 1,630 பேர் தனிப்படுத்தப்பட்டுள்ளனர் 

(UTV|கொவிட்-19)- சுமார் 1,630 பேர் மத்திய நிலையங்களில் தனிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

3,727 பேர் தனிப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்த பின்னர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

நாகலகன் வீதி பிரதேசம் தனிப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சுதுவெல்ல பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் நெருக்கமாக பழகியவர்கள் இந்தப் பிரதேசத்திற்கு வந்திருந்ததாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

Related posts

கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஹிருணிக்காவுக்கு விசேட சிறையா? எப்படி உள்ளார்?