உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 2482 பேர் பலி

(UTV|கொவிட்-19)-அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர்.

இது அமெரிக்காவில் மட்டுமல்ல எந்த ஒரு நாட்டிலும், இதுவரை ஒரே நாளில் ஏற்பட்ட மிகவும் அதிகபட்ச உயிரிழப்பாகும்.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 644,348 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 30 ஆயிரத்து 206 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,554 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2,084,042 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்த கொடிய வைரஸ் பரவியவர்களில் இதுவரை 515,090 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு இதுவரை 134,669 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கடுகதி ரயில் விபத்தில் 36 பேர் பலி

கொரோனா வைரஸ் – 10 இலட்சத்தை தாண்டியது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி