(UTVNEWS | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகளுக்காக புத்தளத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.