உள்நாடுசூடான செய்திகள் 1

சில மாவட்டங்களில் நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்

(UTV|கொழும்பு)- கொழும்பு, புத்தளம், களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை(16) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதுடன் மீண்டும் நாளை(16) மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, புத்தளம், களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்படும் குறித்த காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு வெளியேறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தொடரூந்து சேவை பாதிப்பு

மஹர சிறைக் கலவரம் : உடல்கள் அரச செலவில் அடக்கம்

யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு