(UTVNEWS | COLOMBO) -கடந்த ஜனவரி மாதம் முதல் இடைநிறுத்தப்பட்ட வேதன வருவாய் மீதான கட்டண வரியினை மீண்டும் அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை வட்டி இலாபமாக பெறும் வைப்புரிமையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ”வைப்பிலிடப்பட்ட பணத்திற்கு பிடித்துவைக்கப்பட்டிருக்கும் வரியினை” மீண்டும் அமுல் படுத்த தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தேசிய வருவாய் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவியுள்ள சூழ்நிலைமை கருத்தில் கொண்டு முன்கூட்டிய வரியின் பெயரில் விரைவில் மீண்டும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய வருமானவரி ஆணையாளர் ஜெனரல் நந்துன் குருகோ தெரிவித்துள்ளார்.