உள்நாடு

தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியுள்ள சிலர் வீடு திரும்பவுள்ளனர்

(UTV|கொழும்பு)- தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியுள்ள 60 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வௌியேறவுள்ளதாக பாதுகாப்புப் படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை 1,506 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

3056 பேர், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து, முகாம்களிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

 கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி

மேல் மாகாணத்தில் 2,558 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை

உத்திக பிரேமரத்னவின் ஜப்பான் விஜயம் குறித்து அறிக்கை