வணிகம்

சமூக பொறுப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்கும் Pelwatte

(UTVNEWS | COLOMBO) – முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte,  இலங்கை அரசாங்கத்தின் Covid19  நெருக்கடிக்கெதிரான போராட்ட முயற்சியில் ஒரு வலுவான பங்குதாரராக அந் நிறுவனத்தை இணைக்கும் பல சமூக பொறுப்புணர்வு மற்றும் நுகர்வோரை சென்றடையும் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இதன்படி Pelwatte, தங்கள் தயாரிப்புகளை இலவசமாக வீடுகளுக்கு விநியோகம் செய்யும் சேவையையும், நாடு முழுவதும் பல நன்கொடை திட்டங்களையும் ஆரம்பித்துள்ளது. இத் திட்டங்கள் அவர்களின் பாரிய சமூக பொறுப்புணர்வு உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

“ஒரு பொறுப்பான நிறுவனமென்ற வகையில் சமூகத்திற்கு மீள வழங்குவது அவசியம் என Pelwatte  எப்போதும் கருதுகின்றது. தற்போது முன்னர் எப்போதும் விட, ​​இந்த தத்துவத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டிய ஒரு சகாப்தத்தை நாம் கடந்து செல்கிறோம். இந்த அச்சுறுத்தலை நாட்டிலிருந்து இல்லாதொழிக்க முன்னின்று செயற்படுவோர் மற்றும் அரசாங்கத்துக்கு உதவ, எம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுப்போம்,” என Pelwatte Dairy Industries இன் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க தெரிவித்தார்.

அந்த வகையில், இந் நிறுவனமானது தனது தயாரிப்புகளான (முழு ஆடைப் பால்மா/ பட்டர்/ யோகர்ட்/ ஐஸ்கிரீம்) ஆகியவற்றை உள்ளடக்கிய பல வகையான பொதித் தெரிவுகளை ஊரடங்கு அமுலில் உள்ள காலத்தில், வாடிக்கையாளரின் இருப்பிடங்களுக்கே சென்று விநியோகம் செய்யும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. Pelwatte நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் விநியோகத்திற்காக கட்டணம் எதனையும் அறவிடாது. கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்திட்டமானது, மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், நுகர்வோருக்கு அவசியமான பாலுற்பத்திப் பொருட்களை விநியோகம் செய்வதற்கு நிறுவனத்தை இயலுமைப்படுத்தியுள்ளதுடன், சமூக தொலைவை கடைபிடிப்பதற்கான அரசாங்கத்தின் உத்தரவுக்கும் மக்கள் இணங்கி நடக்க வழி செய்கின்றது. விநியோக விபரங்கள் மற்றும் மேலதிக தகவல்களை https://www.facebook.com/PelwatteDairy/ என்ற பேஸ்புக் பக்கத்தினூடாக பெற்றுக்கொள்ளலாம்.

“கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் COVID19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சியினைக் கருத்தில் கொண்டு நாங்கள் அத்தியாவசிய பாலுற்பத்திப் பொருட்களை விநியோகம் செய்யும் சேவையை ஆரம்பித்தோம். வாடிக்கையாளர்கள் தமது ஓடர்களை Pelwatte இன் சமூக ஊடக கணக்குகளின் மூலம் வழங்க முடியும் என்பதுடன், தயாரிப்புகள் எந்தவொரு விநியோக கட்டணமும் இன்றி வாடிக்கையாளரின் இருப்பிடங்களுக்கே விநியோகிக்கப்படும்.

வீட்டு விநியோக அமைப்பானது களனியில் அமைந்துள்ள Pelwatte இன் துணைக் களஞ்சியசாலையை மையப்படுத்தியதாக இருக்கும். இந்த வீட்டு விநியோகப் பொதிகள் ரூபா 1500 முதல் ரூபா 5000 வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. நாம் வாடிக்கையாளரின் பட்ஜட் மற்றும் தேவைக்கேற்ப நான்கு வகையான பொதிகளை வழங்குகின்றோம்,” என Pelwatte Dairy Industries  இன் பொது முகாமையாளர் லக்சிறி அமரதுங்க தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் நிலவும் சுகாதார அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, Pelwatte தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதுடன், உற்பத்தி மற்றும் விநியோக செயன்முறையின் போது கடுமையான தூய்மை நடைமுறைகளைப் பின்பற்றும். இது ஊழியர்களும், சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் நன்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.

ஒரு பொறுப்பான கூட்டாண்மை குடிமகனாக, Pelwatte  சமூக பொறுப்புணர்வு முயற்சிகள் மூலம் பல நன்கொடை திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. தற்போது முன்னின்று செயற்படும் உள்நாட்டு சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நாட்டில் நிலவும் நோய்த்தொற்று நிலை மற்றும் நாடுபூராகவும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு உதவியளிப்பதில் இந்த செயற்திட்டம் கவனம் செலுத்துகின்றது.

அதன்படி, Pelwatte இன் பிரதான தொழிற்சாலை அமைந்துள்ள புத்தல பிரதேசத்தில் உள்ள இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பால்மா தொகையொன்று வழங்கப்பட்டுள்ளது. சேவையில் இருக்கும்போது அவர்களின் தனிப்பட்ட ஆரோக்கியத்தை தியாகம் செய்யும் காவல்துறையின் சிரமம் மற்றும் முயற்சி குறித்து கவனத்தில் கொண்டு இந்த நன்கொடை வழங்கப்பட்டது. இந்த பாதுகாப்பு முன்னிலை பணியாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக எவ்வித ஓய்வுமின்றி தொடர்ச்சியான சேவையில் தங்கள் பணிகளைத் தொடர்கின்றனர். இவற்றைத் தவிர, புத்தலவில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு கிருமி நாசினி விசிறும் கருவிகள் மூன்றும் வழங்கப்பட்டன. இந்த கிருமி நாசினி விசிறும் கருவிகள் புத்தல பஸ் நிலையம் உள்ளிட்ட அதிக அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் கிருமி நாசினிகளை விசிறுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

புத்தல பிரதேசத்தில் தினசரி வருமானம் பெறுபவர்கள் தொடர்பிலும், தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவு மற்றும் வருமானம் ஈட்டும் பாதைகள் முடக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் எதிர்கொள்ளும் திடீர் நிதி நெருக்கடி தொடர்பிலும் Pelwatte கவனத்தில் கொண்டுள்ளது. இது போன்று  Pelwatte நிறுவனம் முழு ஆடைப் பால்மா தொகையொன்றை புத்தல மாவட்ட செயலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த பால்மா பக்கற்றுக்கள் புத்தல பகுதியில் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களிடையே விநியோகிக்கப்பட்ட உணவுப் பொதிகளில் உள்ளடக்கப்பட்டன.

Pelwatte எப்போதும் சமூக பொறுப்புணர்வு முயற்சிகளை தங்கள் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகவே கருதுகின்றது. முன்னைய ஆண்டுகளிலும் பல்வேறு சமூக அபிவிருத்தி செயற்திட்டங்களை பதுளையில் முன்னெடுத்திருந்ததுடன், இவை தோட்டப்புற சமூகங்களுக்கு பங்களிப்புச் செய்திருந்தன. புராதன யுதகனாவ ஆலய வருடாந்த பெரஹரா மற்றும் மாளிகாவில ஆலய பெரஹராவிற்கான பால் பக்கற்றுக்கள் விநியோகிக்கும் செயற்திட்டங்கள், இந் நிறுவனம் முன்னெடுக்கும் பல்வேறு திட்டங்களில் குறிப்பிட்டுக் கூறக் கூடியவையாகும்.

Related posts

எல்ல பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

இலங்கை வங்கி துருனு திரிய கடன் திட்டத்தின் கீழ் 664 பேருக்கு கடன்…