உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை மற்றும் சீனாவிற்கு புகழாரம்; சீனாவை நெருங்கும் இலங்கை

(UTVNEWS | COLOMBO – இலங்கை மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே ‘கொவிட் -19″ கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் மிகச் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நாடுகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள ஆய்வொன்றின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில், இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் முன்னாயத்த ஏற்பாடுகள் மிக சிறப்பானதாக அமைந்துள்ளதாகவும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவின் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் உயரிய மட்டத்தில் உள்ளது என கூறும் அந்த ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை பொறுத்தவரை வேறெந்த நாடுகளும் மேற்கொள்ளாத மிகச் சரியான பாதுகாப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூறியுள்ளனர்.

அனைத்து நாடுகளுமே கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னரே தமது நாட்டினை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த நிலையில் இலங்கை அவ்வாறு அல்லாது கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவ முன்னரே முன்னாயத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இப்போது வரையில் இலங்கையின் மருத்துவ கட்டமைப்பு மற்றும் வைரஸை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் சுகாதார வேலைத்திட்டம் மிக உயரிய மட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

செயற்கை முட்டை விற்பனை தொடர்பாக மக்களிடம் வேண்டுகோள்!

ஶ்ரீ.சு.கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர்

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்-ஜனாதிபதி