உள்நாடு

நிவாரண கொடுப்பனவுகள் தொடர்பிலான அறிக்கை

(UTVNEWS | COLOMBO) –நிவாரண கொடுப்பனவுகள் தொடர்பிலான அறிக்கை ஒன்றை மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

முதியோர்கள், விசேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் சமூர்த்தி குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பணிகள் தெ்ாடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி வரை 62,977 பேருக்கு ரூபா 5000 நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறுநீரக நோயாளிகளுக்கான ரூபா 5000 கொடுப்பனவுகள் இதுவரையில் 38,083 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமூர்த்தி பயனாளிகளுக்கான ரூபா 5000 கொடுப்பனவு 78,962 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

HMPV ஆபத்தான வைரஸ் தொடர்பில் விசேட அவதானம்

விஜித ஹேரத்தை சந்தித்தார் ஜூலி சங்

editor

முஸ்லிம் ஜனாஸாக்களுக்கு மட்டுமா One Law One Country சட்டம்? [VIDEO]