உள்நாடு

கடற்படை தளபதி விடுத்துள்ள கோரிக்கை

(UTV|கொழும்பு)- கொரோனா அச்சம் காரணமாக இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இலங்கைக்குள் அகதிகளாக அத்துமீறி நுளைய முயற்சிப்பவர்களை தடுக்கும் வகையில் இலங்கையின் கடல் பிராந்தியங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அவ்வாறானவர்கள் எவ்விதத்திலும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடற் பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற் தொழிலாளர்களிடம் மேற்படி விடயம் தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதை அவதானித்தால் உடனடியாக இலங்கை கடற்படைக்கு அல்லது ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல்களை தெரியப்படுத்துமாறும் கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைவாக வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு கடல் பிராந்தியங்களில் இலங்கை விமானப்படையுடன் இணைந்து விசேட கூட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வேகமாகப் பரவிவரும் வைரஸ் தொற்று – சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

சமூர்த்தி அதிகாரிகளும் அரசுக்கு எச்சரிக்கை