உள்நாடுசூடான செய்திகள் 1

எதிர்வரும் ஒரு வார காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும் – அனில் ஜாசிங்க

(UTV|COLOMBO) – கொவிட் – 19 வைரஸிற்கு எதிராக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றபோதும் தமிழ் சிங்கள புத்தாண்டு வரையான இலங்கையின் நிலைமை தொடர்பான நிலையை சரியாக அறிவிக்க முடியாமல் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நாட்டில் அசாதாரண நிலை எந்தளவிற்கு கூடும் என கருத்து தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நாளாந்தம் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் அடுத்துவரும் ஒரு வார காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டிய சுகாதார சேவைகள் பணிப்பாளர், புத்தாண்டு காலப்பகுதிவரை கடுமையான சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

எனவே, வீடுகளில் இருப்பவர்களுக்கு நோய் தொற்று தொடர்பான அறிகுறி இருந்தால் 1390 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related posts

ராஜபக்‌ஷர்களை நான் பாதுகாத்திருந்தால் அவர்கள் என்னை விட்டு ஓடியிருக்க மாட்டர்கள் – ஜனாதிபதி ரணில்

editor

மேலும் சில யானைகளின் உடல்கள் கண்டுபிடிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு SLPP தீர்மானம்.