உள்நாடுவணிகம்

மேலதிக வட்டியுடன் விசேட வங்கிக் கணக்கு

(UTVNEWS| COLOMBO) –வெளிநாட்டிலுள்ளவர்கள் பணத்தை வைப்பிலிடுவதற்காக விசேட வங்கிக் கணக்கொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனை இன்று (09) அரசாங்கத் தகவல் திணைக்கத்தில் இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நாடு முகங்கொடுத்துள்ள நிதி நெருக்கடியை கவனத்திற்கொண்டும் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி அடைவதை தடுக்கும் வகையிலும் அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

இலங்கையில் வெளிநாட்டு பணத்தை வைப்பிலிடும் கணக்குகளுக்கு (NRFC) செலுத்தப்படும் வட்டிக்கு மேலதிகமாக, இந்த வைப்புகளுக்கு 02 வீத மேலதிக வட்டி வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த வைப்பீடுகள், குறைந்தபட்சம் 06 மாதங்களாவது கணக்கில் பேணப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலாபகரமான நிபந்தனைகளின் கீழ், வரி பிரச்சினைகள் இன்றி, இவ்வைப்புகளை மேற்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு விசேட கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

கொவிட் 19 மத்திய நிலையமாக தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றிற்கு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல் நாளை