உள்நாடு

கொழும்பு நகரின் சில பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு

(UTV|COLOMBO) – கொழும்பு நகரின் சில  பகுதிகளில் நாளை(09) பிற்பகல் 1 மணி முதல் 18 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

நிலக்கீழ் திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு 9, கொழும்பு 14 மற்றும் நவகம்புர ஆகிய பகுதிகளில் குறித்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  கொழும்பு 13 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்ததில் நீர்விநியோகம் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நீங்களும் மேல்மாகாணத்தில் உள்ள கொரோனா தொற்றாளரா?

பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகிறோம் நிச்சயமாக பாய்வோம்.

அனைத்து பல்கலைக்கழகங்களதும் மீள் ஆரம்பம் ஒத்திவைப்பு