உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1327 பேர் கைது

(UTV|கொழும்பு)- நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று(05) காலை 6 மணி முதல் இன்று(06) காலை 6 மணி வரையான 24 மணிநேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 1327  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு,  312 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 14,795  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரை 3665  வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்குறிப்பிட்டுள்ளது.

Related posts

பெருந்தோட்ட மக்களுக்கான நிரந்தர காணி உறுதி பத்திரங்கள்

இலங்கை – இந்திய கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்.

நாடு திரும்பும் இலங்கையர்கள் அனுமதி பெறத் தேவை இல்லை