(UTV|கொழும்பு)- இங்கிலாந்து பிரதமர் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பத்து நாட்களுக்கு முன்பு பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
பத்து நாட்களுக்குப் பிறகு பிரதமருக்கு தொடர்ந்து கொரோனா வைரஸின் அறிகுறிகள் இருந்ததால், மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.