உள்நாடு

மின் மற்றும் நீர் குழாய் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

(UTV|கொழும்பு)- ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில் காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விசேட வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

இதுதொடரபாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (இ.பொ.ப.ஆ.), இலங்கை மின்சார சபை (இ.மி.ச.), தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றுடன் இணைந்து நாளை முதல் விசேட வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட ஹொட்லைன் சேவையின் ஊடாக பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரச்சினைக்கு அமைய தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள மின்னியலாளர் அல்லது குழாய் திருத்த பணியாளர் ஒருவரது உதவியை பாவனையாளர் நாடலாம்.

ஊரடங்கு உத்தரவு அமுலிலுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துரை மாவட்டங்களில் முதல் கட்டமாக விசேட சேவைக்கான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பாவனையாளர்களின் தேவைக்கேற்ப இவ்விசேட தொழில்நுட்ப உதவியை ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் வீடுகளிலுள்ள குழாய் நீர் அமைப்பில் ஏதேனும் பிரச்சினை காணப்படுமாயின் 1939 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக குழாய் திருத்த பணியாளர் ஒருவரது சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

உங்களின் வீட்டு மின் அமைப்பில் ஏதேனும் பிரச்சினை காணப்படுமாயின் 1987 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக மின்னியலாளர் ஒருவரது சேவையை பெற்றுக் கொள்ளும் அதேவேளை, தனியார் மின்சார நிறுவனத்தின் (லெகோ) பாவனையாளர்கள் 1910 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் இச்சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

இச்சேவை தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 0764271030 என்ற இலக்கத்தின் ஊடாக இ.பொ.ப.ஆ.-ஐ தொடர்பு கொள்ளலாம்.

Related posts

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் மீதான ஆய்வுகள் ஆரம்பம்.

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு.

editor

சனி அல்லது ஞாயிறு தினங்களில் தீர்மானம் எட்டப்படும்