வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்தில் 3 ஆவது இலங்கையர் கொரோனாவுக்கு பலி

(UTVNEWS | LONDON) -இங்கிலாந்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உயிரிழந்தவர் 42 வயதுடைய யாழ்ப்பாணம் – மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட குடும்பஸ்தர் ஒருவரே நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்பட்டதன் அடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, லண்டனில் வசித்துவந்த இலங்கையரான மஹரகம பகுதியைச் சேர்ந்த 55 வயதான லக்‌ஷான் விஜேரத்ன என்பவர் லண்டனின் ஃபெல்தம் பகுதியில் உயிரிழந்தார்.
இதனை அடுத்து இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற 70 வயதுடைய ஹென்றி ஜயவர்தன என்ற ஓய்வுபெற்ற வைத்தியர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்திருந்தார்.

Related posts

Two arrested with heroin

Sri Lanka all set for Expo 2020 Dubai

பசிபிக் பெருங்கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்