உலகம்

கொரோனா வைரஸ் – உலக அளவில் உயிரிழப்பு 60 ஆயிரத்தை கடந்தது

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 1,130,576 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 60,146 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 235,880பேர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் இத்தாலியில் அதிக அளவாக 14,681 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. அங்கு 11,744 பேர் உயிரிழந்துள்ளதுடன், அமெரிக்காவில் 7,403 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 92 பேர் பலி

மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் உறுதி

உலகின் பெரிய இந்து கோவிலான ‘அங்கோர்வாட்’ ஆலயத்திற்கு பூட்டு