உள்நாடு

யாழில் 7 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுமதி

(UTVNEWS | JAFFNA) –யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் தற்போது 7 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனோ தொற்று நோய் சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் கொரோனோ சந்தேகத்தில் போதனா வைத்தியசாலையில் மட்டும் அனுமதிக்கப்பட்டு மேற்கொண்ட பரிசோதனைகளில் 55 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு மாத்திரம் கோரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, வைத்தியசாலைக்கு வெளியே தொற்று நோய் பரிசோதனை மேற்கொண்ட 20 பேரில் 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் ஏனைய 14 பேர் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

“கிடைத்த வாய்ப்பை சஜித் பயன்படுத்திக் கொள்ளவில்லை” குமார வெல்கம

அரச ஊடகங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

editor