(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மத்தியில் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதியின் விசேட செயலணி மேற்கொண்டுவருகிறது.
இந்தவர்தமானியில், கொரோனா வைரஸ் தாக்கத்தல் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி அப்பிரதேசங்களுக்கு கிராமியப் பிரதேச மற்றும் உற்பத்தியாளர்களால் வழங்கப்படும் உணவு விநியோகம் உடனடியாக நுகர்வோருக்குப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் வாழ்க்கையை உரியவாறு நடாத்திச் செல்வதற்குத் தேவையான சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதை வழிநடத்துதல், கூட்டிணைத்தல் மற்றும் தொடராய்வு செய்வதற்காக இந்த ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த செயலாணியில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி திரு. பசில் ராஜபக்ஸவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் வட மாகாண ஆளுநர், . பி. எஸ். எம். சார்ள்ஸ் மேல் மாகாண ஆளுநர், திரு ஏ. ஜே. எம். முசம்மில் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதி லெப்டினெல் ஜெனரல் சவேந்திர டி சில்வா பதில் பொலிஸ் மா அதிபர் அடங்களாக 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.