உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 1321 பேர் உயிரிழப்பு

(UTV|அமெரிக்கா) – அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று ஒரே நாளில் மட்டும் 1321 பேர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் இதுவரை 59,162 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,098,456 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக உயிரிழப்பின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 277,161ஆக அதிகரித்துள்ளது.

அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே மட்டும் 1321 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,392 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

காசா சிறுவர் நிதியத்திற்கு 127 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது!

போரிஸ் ஜான்சன் சாதாரண சிகிச்சை பிரிவில்

இந்தியாவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு சிறை தண்டனை