உள்நாடு

யாழ். வைத்தியசாலையில் 6 பேருக்கு கொரோனோ இல்லை

(UTVNEWS | COLOMBO) – கொரோனோ சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனோ தொற்று நோய் சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்று (02) பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட ஆறு பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனோ சந்தேகத்தில் போதனா வைத்தியசாலையில் மட்டும் அனுமதிக்கப்பட்டு மேற்கொண்ட பரிசோதனைகளில் 50 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதே வேளை, வைத்தியசாலைக்கு வெளியே தொற்று நோய் பரிசோதனை மேற்கொண்ட 10 பேரில் 3 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் ஏனைய 7 பேர் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதே போல தற்போதும் 10 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்களின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts

பொலிஸார் மீது டிப்பர் வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

ரிஷாத் பிணையில் விடுதலை

2025 முதல் நடைமுறைக்கு வரும் இ-கடவுச்சீட்டு