உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – 10 இலட்சத்தை தாண்டியது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

(UTV|சீனா ) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,015,531 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரஸினால் இதுவரை 53,198 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரத்து 623 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பரவியவர்களில் 212,991 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பில் ஐக்கிய தேசிய கட்சி அமரும்

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

மஹிந்தவுக்கு தேர்தல் செலவுகளுக்காக பணம் கிடைத்தது குறித்து விசாரணை தேவை