விளையாட்டு

நீச்சல் வீராங்கனை போக்லர்காவுக்கு கொரோனா

(UTV|கொழும்பு)- ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஹ்ங்கேரி நீச்சல் வீராங்கனை போக்லர்கா கபாஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற அங்கேரி நீச்சல் வீராங்கனை போக்லர்கா கபாஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உலகச் சாம்பியனான அவருக்கு முதல் கட்ட சோதனையில் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. ஆனால் 2வது கட்ட சோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதை அவர் சமூகவலைதளத்தில் தெரிவித்து உள்ளார். இதைப்போல மேலும் 8 நீச்சல் வீரர் வீராங்கனைகளுக்கு அந்நாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஹங்கேரியில் கொரோனாவுக்கு 525 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸினால் இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 47ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

மாலிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது நியூசிலாந்து

‘ஒன்றான வெற்றி’ எனும் தொனிப் பொருளில் LPL பாடல் அறிமுகம்