உலகம்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் 36,000 ஊழியர்கள் பணி இடைநீக்கம்

(UTV|கொழும்பு)- சுமார் 36,000 ஊழியர்களை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இடைநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக விமானங்களை தற்காலிகமாக இரத்து செய்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், இந்த பணிநீக்கம் தொடர்பாக ஒரு வாரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான கேபின் குழு உறுப்பினர்கள், பொறியாளர்கள், தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஏனைய பணியாளர்கள் என 80 சதவீத ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கபப்டுகின்றன.

எனினும், அரசின் கொரோனா வைரஸ் திட்டப்படி, இவர்கள் வாங்கிவந்த 80 சதவீத ஊதியம் இவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

இலங்கையை 4ம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் தள்ளியது அமெரிக்கா

WhatsApp இற்கு புதிய வசதிகள்

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்