வணிகம்

வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்பு உத்தரவாதத்தை நீடிக்கும் vivo

(UTVNEWS | COLOMBO) –கொழும்பு, ஏப்ரல் 03,2020; தற்போதைய COVID-19 தொற்று பரவலைத் தொடர்ந்து, உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான vivo, இலங்கையில் உள்ள தனது அனைத்து சேவை நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடியுள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டே, இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இதனை ஈடுசெய்யும் முகமாக vivo, இலங்கையில் அதன் ஸ்மார்ட்போன்களுக்கான  உத்தரவாதத்தை நீடித்துள்ளது. இதன் பிரகாரம், 2020  மார்ச் 16 முதல் மே 30 வரையான காலப்பகுதிக்குள் உத்தரவாதம் காலாவதியாகும் vivo சாதனங்களைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கான உத்தரவாதம் 2020 மே 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொள்வனவு செய்யப்பட்ட vivo சாதானங்களுக்கு மட்டும் இந்த நீடிப்பு தானாக செல்லுபடியாகும். வாடிக்கையாளர்கள் தமது IMEI இலக்கத்தைக் கொண்டு, vivo வின் இணையத்தளத்தில் தமது உத்தரவாதம் தொடர்பான தகவல்களை சரிபார்க்க முடியும். மிகுந்த சமூக பொறுப்புணர்வுடன் கூடிய நிறுவனம் என்ற வகையில், இந்த உத்தரவாதக் கால நீடிப்பானது நுகர்வோருக்கு வசதியாக அமையுமென்பதுடன், vivo வின் அக்கறையையும் எடுத்துக்காட்டுகின்றது.

“இந்த முக்கியமான நேரத்தில், எங்கள் பொறுப்புணர்வு தொடர்பில் உறுதியாக உள்ளதுடன், COVID-19 தொற்று பரவிவரும் நிலையில் எமது வாடிக்கையாளர்களின் வசதி கருதியே இந்த உத்தரவாதம் நீடிக்கப்பட்டுள்ளது,” என Kevin Jiang, CEO, vivo mobile Sri Lanka தெரிவித்தார்.

இந்த நீடிப்பானது மறு அறிவித்தல் வரை மாற்றமின்றி இருக்குமென்பதுடன், vivo வாடிக்கையாளர்கள் சேவை தொடர்பான அனைத்து விபரங்களையும், 0115 677 677 என்ற துரித அழைப்பு இலக்கம் ஊடாகவோ அல்லது servicecenter@lk.vivo.com என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமாகவோ அல்லது www.facebook.com/vivoSriLanka என்ற பேஸ்புக் பக்கத்திற்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியோ பெற்றுக்கொள்ள முடியும்.

vivo ஏற்கனவே COVID-19 பரவுவதைத் தவிர்க்க பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளதுள்ளது. இலங்கையில் உள்ள பணியாளர்கள் vivo பாவனையாளர்களுக்கு உதவும் பொருட்டு வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த கடினமான நேரங்களில், எங்கள் வாடிக்கையாளர்கள், பங்காளர்கள், பணியாளர்கள் மற்றும் சக பிரஜைகளின் நல்வாழ்வே எங்கள் பிரதான நோக்கமாகும்.

Related posts

சீரற்ற காலநிலை – மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

இலங்கையின் திரவ இயற்கை வாயு விநியோக முறையில் புதிய புரட்சி

இலங்கை SURADO CAMPUS நன்கொடையாக வழங்கிய அச்சு இயந்திரம்