(UTVNEWS | COLOMBO) -கொவிட் 19 தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து விலகவுள்ளதாக எச்சரிக்கை விடுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன் இன்றைய தினம் கலந்துரையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிட் 19 தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து விலக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமது கடமைகளுக்கு தேவையான சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் முதல் கொவிட் 19 தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து விலகவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கொவிட் 19 தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து விலகவுள்ளதாக எச்சரிக்கை விடுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன் இன்றைய தினம் கலந்துரையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.