(UTVNEWS | COLOMBO) –முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Ltd, நாட்டின் கொரோனா தொற்று (COVI19) நிலைமை தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதோடு, உள்நாட்டு பாற்பண்ணை விவசாயிகளிடமிருந்து தொடர்ந்து பால் சேகரிப்பதை உறுதி செய்துள்ளது. முழு உலகும் தொற்று நோய் நிலமையை எதிர்கொண்டுள்ள நிலையிலும், பாற்பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரம் எவ்விதத்திலும் பாதிப்படைய கூடாது என்பதை கருத்தில் கொண்டு, உள்ளூர் பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte, இந்த உறுதிமொழியை ஏற்றுள்ளது.
“உள்ளூர் பால் பதப்படுத்தும் நிறுவனம் என்ற வகையில் எங்கள் முக்கிய அக்கறைகளில் ஒன்று, நாங்கள் பால் சேகரிப்பைத் தொடர்வதும், எங்கள் உற்பத்தியைத் தொடர்வதுமாகும். பாற்பண்ணை விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக பால் சேகரிக்கப்படுவது அவசியமாகும், ஏனெனில் அவர்களின் வாழ்வாதாரம் அதை சார்ந்துள்ளது. அதனாலேயே Pelwatte தொடர்ந்து பால் சேகரிப்பை மேற்கொள்வதுடன், இது கொள்வனவு செய்யப்பட்ட பாலுக்கான தொகை உரிய நேரத்தில் செலுத்தப்படுவதனையும் உறுதி செய்கின்றது. இதன்மூலம், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பாற்பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தின் மீதான எந்தவிதமான எதிர்மறையான தாக்கத்தையும் எதிர்கொள்வதே எங்கள் நோக்கமாகும்,” என Pelwatte Dairy Industries இன் முகாமைத்துவ பணிப்பாளர், அக்மால் விக்ரமநாயக்க தெரிவித்தார்.
தற்போதைய நிலைமையின் சுகாதார அபாயத்தை கருத்தில் கொண்டு, Pelwatte தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதுடன், உற்பத்தி செயல்பாட்டின் போது கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் நன்கு பாதுகாக்கப்படுகின்றர் என்பதை உறுதிசெய்கிறது.
தற்போதைய நிலையில் விநியோக சங்கிலி முகாமைத்துவதம் தொடர்பில் விளக்கமளித்த, Pelwatte இன் பிரதி பொது முகாமையாளர் (விநியோக சங்கிலி மற்றும் சந்தைப்படுத்தல்), சுசன்த மல்வத்தை, ” உலகெங்கிலும் உள்ள பல பால் மற்றும் பால் உற்பத்தி நாடுகள் தொற்றுநோய் நிலமையின் கீழ் உள்ளதையும் மீறி, கடினமான காலங்களில் நாங்கள் எமது தயாரிப்பு ஓட்டத்தை பராமரிப்பது மற்றும் விநியோகச் சங்கிலியுடன் தொடர்ந்து செயல்படுவது மிக அவசியமாகும். வேகமாக வளர்ந்து வரும் உள்ளூர் பாற்பண்ணை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக, பால் பொருட்களை உற்பத்தி செய்யும் செயன்முறையை தொடர்வதோடு, இந்த தயாரிப்புகளை வட மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கிறோம்,”என்றார்.
உள்ளூர் பாற்பண்ணை விவசாயிகளுக்கு கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் மற்றும் நிறுவனத்தின் தேவைக்கேற்ப அவர்களால் வழங்க இயலாமை போன்ற கூடுதல் சூழ்நிலைகள் காரணமாக, நிறுவனத்தின் முயற்சியையும் மீறி பால் சேகரிப்பதில் தாம் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக பாலுற்பத்தி நிறுவனம் சுட்டிக்காட்டியது. எனினும், நிறுவனம் தொடர்ந்து ஊவா, மத்திய, கிழக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வலுவான பால் சேகரிப்பு மையங்களைக் கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள பால் சேகரிப்பு மையங்களின் செயல்பாடானது நெருக்கடி நிலையின் போது மிக முக்கியமானதாக மாறியுள்ளது.
பலவிதமான பாலுற்பத்திகளை சந்தைப்படுத்தும் Pelwatte நிறுவனமானது தனது குளிரூட்டப்பட்ட மற்றும் உறையவைக்கப்பட்ட உற்பத்திகளின் போது 100% பால் கொழுப்பினை மாத்திரமே பயன்படுத்துகிறது. அதேபோல் எவ்விதச் செயற்கை சுவையூட்டிகள் அல்லது சேர்க்கைகளும் இல்லாமல் பால்மா உற்பத்தியினையும் மேற்கொள்கிறது. Pelwatte இன் முழு பால்மா உற்பத்திச் செயன்முறையும் 24 மணி நேரத்திற்குள் முடிவடையும் பொறிமுறையின் மூலம் தயாரிக்கப்படுகிறது. மேலும், வெறும் 72 மணி நேரத்திற்குள் தயாரிப்புகள் நுகர்வோர் மற்றும் வர்த்தக நிலையங்களைச் சென்றடைவதையும் நிறுவனம் உறுதி செய்கிறது.
Pelwatte இன் சொந்த நவீன பாலுற்பத்தி தயாரிப்பு தொழிற்சாலையானது டெனிஸ் தொழில்நுட்பத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டதுடன், பால்மா (முழு ஆடை மற்றும் கொழுப்பற்றது), கிருமி நீக்கப்பட்ட பால், வெண்ணெய், யோகட், யோகட் பானம், தயிர், ஐஸ்கிரீம் & பசு நெய் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது. Pelwatte Dairy Industries இன் பாலுற்பத்தி பதப்படுத்தும் தொழிற்சாலையானது ISO 22000-2005 சான்றிதழைக் கொண்ட, இலங்கையில் உள்ள பாரிய அளவிலான நிறுவனங்களில் முதல் நிறுவனமாகும்.