உலகம்

காங்கோ குடியரசின் முன்னாள் அதிபர் கொரோனா வைரஸால் பலி

(UTV|காங்கோ ) – காங்கோ குடியரசின் முன்னாள் அதிபர் ஜாக் ஜோஷாங் யோம்பி, தனது 81.ஆவது வயதில் ஒபாங்கோ கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உயிரிழந்துள்ளார்.

இவருக்கு ஏற்கனவே உடல்நலக் கோளாறு இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1977 முதல் 1979 வரை அதிபர் பதவியில் இருந்தார் ஜாக் ஜோஷாங் யோம்பி ஒபாங்கோ. 1979இல் தற்போதைய அதிபர் டெனீ சசூ இன்கேசோவால் ஆட்சியை கைப்பற்றியபோது இவர் பதவியை இழந்தார்.

1991இல் பல கட்சி ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்படும்வரை பல ஆண்டுகள் சிறையில் இருந்த இவர், 1997இல் உள்நாட்டுப் போர் தொடங்கும்வரை பிரதமராக இருந்தார். 1997இல் பிரான்சில் இவர் தஞ்சமடைந்தார்.

Related posts

பாகிஸ்தானின் பிரதமர் ஆக பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு!

உயிரிழந்த நடிகை பூனம் பாண்டே!

இடிபாடுகளுக்கு இடையே இதயத் துடிப்பை தேடும் மீட்புப் படையினர்